Wednesday, June 2, 2010

பெண்களுக்குப் பாரபட்சம் காட்டுவதையும், இழிவாக நடாத்துவதையும் இல்லாதொழிப்போம்!

மனிதன் பால் ரீதியில் ஆண்,பெண் என உயிரியல் வகையில் இரு பிரிவுகளுக்கு வகுக்கப்படுகின்றனர். இவ்விரு பிரிவுகளில் பெண் அநேகமாக பாரபட்சம் காட்டுதலுக்கு உட்படுகின்றாள். தாய், சகோதரி, மனைவி போன்ற பல்வேறு பாத்திரங்களை வகிக்கும் பெண் குடும்பத்தினுள் பெருமளவில் இத்தகைய பாரபட்சம் காட்டுதல்கள் மற்றும் இழிவாக நடாத்தப்படுதல்களுக்கும், சில வேளைகளில் மனைசார் வன் செயல்களுக்கும் இரையாக வேண்டியுள்ளாள்.

கல்வி கற்றல் மற்றும் தொழில்களில் ஈடுபடுதல் போன்ற பல துறைகளில் பெண்கள் பாரபட்சம் காட்டுதல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு பெண்களுக்கு எதிராக ஏற்படுகின்ற வேறுபாடுகளும், இழிவான செயல்களை எதிர்த்து டொமினிக்கன் இராச்சியத்தின் சர்வாதிகாரியாக இருந்த ரபாயல் ரெஜ்லோவுக்கு எதிராக குரல் எழுப்பிய மிராபல் (Merabal) சகோதரிகள் மூவரும் 1961ம் ஆண்டு கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலையின் மூலம் ஆரம்பித்த பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பது பற்றிய கலந்துரையாடல் ஐக்கிய நாடுகளில் பொது மாநாட்டினால் 1999ல் நிறைவேற்றி, ஒவ்வொரு வருடமும் நவம்பர் 25ம் திகதி பெண்கள் வன்முறைகள் எதிர்க்கும் சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இலங்கை சனத்தொகையில் 52% க்கு மேற்பட்ட பெண்கள் அன்னிய செலாவணியை ஈட்டுவதில் ஆண்களை விட முன்னிலை வகிக்கின்றனர். வெளிநாட்டில் பணிபுரியும் பெண்களும் ஆடைத்தொழிற்சாலைகளில் பணி புரியும் இளம் பெண்களும் இலங்கையின் பிரதான அன்னிய செலாவணி ஈட்டுத்தரக்கூடிய தேயிலைத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் ஆகியவர்களால் ஏற்படும் சேவை மகத்தானது. இன்னமும் மனைசார்ந்த பணி, சிறுவர் மற்றும் முதியோர்களை பராமரிப்பதில் பிரதானமாக இலங்கைப் பெண்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

குடும்பத்தினுள் பெண்கள் முழு நேர சேவையில் ஈடுபட்டிருப்பினும் வீட்டு வேலைகள், பிள்ளைகளைப் பேணிக் காத்தல் பற்றிய பொறுப்புக்களின் பிரதானமான பங்கொன்று அல்லது அதைப் பூரணமாக செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் பெண்ணுக்கு உள்ளது.

ஒரு பெண் குடும்பத்தின் முழுப்பராமரிப்பையும் கொண்டு சென்றாலும் தாய்க்கு பிள்ளைகளின் பாதுகாவலர் அந்தஸ்து உரித்தாக்கப்படுவது சட்டமுறையான விவாகமொன்று நடைபெறாதுள்ள சந்தர்ப்பத்தில் மாத்திரமே. சட்டமுறையான விவாகமொன்றினால் கிடைக்கும் பிள்ளைகளின் பாதுகாவலர் அந்தஸ்து ஒரு தாய்க்கு உரித்தாவதில்லை.

சுய தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு கடன் வசதிகள் மற்றும் பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதில் கஷ்டங்கள் ஏற்படுகின்றன. பல பெண் ஊழியர்கள் வெளிநாடுகளில் பல விதமான கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கின்றனர் என்பதுடன் திரும்பி வருவது, சிதைந்திருக்கும் குடும்பத்திற்கே. வேதனங்கள் பெறாத மலைசார் ஊழியர்களின் எண்ணிக்கை ஆண்களைப் போல் நான்கு மடங்காகும். விவசாய ஓய்வூதியத்திட்டத்தினுள் பெண்களின் பதிவு மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளது. விவசாய ஓய்வூதியத்திட்டத்தில் அது 23% ஆக உள்ளதுடன் கடற்தொழில் ஓய்வூதியத்திட்டத்தில் 1% ஆகவும் உள்ளது.

சமுதாயத்தில் பெண் பலவீனமுள்ளவராகக் கருதுதல் மற்றும் அதே விதத்திலேயே நடாத்தப்படுதல், விதவைகள், மணநீக்கம் செய்தவர்கள் மற்றும் தனிமையிலான தாய்மார்கள் பீடிக்கப்பட்ட குழுவொன்றாக ஆகுதல்.

சுகாதாரம் மற்றும் போசணை போன்ற விடயங்களில் பெண்களுள் சுமார் 50% பேர் மந்த போசணையால் பீடிக்கப்படுகின்றனர். (உதாரணம்:- சுகாதாரம், போசணை, குடும்பக்கட்டுப்பாடு, குழந்தைகள் மற்றும் நோய்களைத் தடுத்தல் மற்றும் சுகப்படுத்தல்) பிரசவத் தொகுதியில் புற்று நோய்களை முதனிலையில் இனங்காணுதல் பற்றிய அறிவை பெண்களுக்கு பெற்றுக் கொடுத்தல்;

விஷேசமாக முலைகளில் மற்றும் கர்ப்ப வாயிலில் உண்டாகின்ற புற்று நோய்கள், எச்.ஐ.வி வைரஸ் எயிட்ஸ் நோய் உட்பட பாலியல் ரீதியில் நோய்களின் அபாயகரத்தன்மை, தாயின் உயிரைப்பறிக்கும் சட்ட விரோத கருச்சிதைவுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பூப்பெய்துதல், கர்ப்பிணியாதல், மாதவிடாய் நிற்றல் மற்றும் வயது முதிர்தல் போன்ற பெண்களின் வாழ்க்கைச் சக்கரத்தில் பல சந்தர்ப்பங்களில் பிரச்சனைகள் நிகழ்கின்றன.

கணவரால் ஏற்படுகின்ற தொல்லைகள், சேவைத்தளத்தில் ஏற்படுகின்ற பாலியல் தொல்லைகள், போக்குவரத்தின் போது ஏற்படுகின்ற பாலியல் தொல்லைகள், யுத்த மோதல்கள் நிகழ்கின்ற பல்வேறு வன்செயல்கள் போன்று சமுதாயத்தின் எல்லாத் துறைகளிலிருந்தும் பெண் கற்பழிப்பு பற்றிய அறிக்கைகள் கி;டைக்கப் பெறுகின்றன.

முன்பை விட இப்போது பெண்களை நன்கு கவனிக்கிறார்கள் என்றாலும் சீதனக் கொடுமை ஒழிந்தபாடில்லை. தொழில் ரீதியாகவும் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்டுவதுண்டு. பாதையில், பஸ்ஸில் என்று ஆண்களின் வக்கிரப்புத்தி பெண்கள் மீது தாவப்படுகிறது.

பெண்களுக்கு சமவுரிமை கிடைத்து விட்டது என்று கூறிக் கொண்டாலும் பொருளாதார, சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் குடியியல் ரீதியில் இன்னும் இரண்டாம் பட்சமாகவே கவனிக்கப்படுகின்றனர். இதன் மூலம் பெண்களின் உரிமை மீறல் அப்பட்டமாகவே நடக்கிறது. இவ்வாறான கருத்துக்களினூடாக பார்க்கிற போது விசேஷ ஒரு குழுவாக பெண்கள் மீது கவனம் செலுத்தி அவர்களது உரிமைகளை பேணிக்காப்பது அத்தியவசியமாகிறது.

நன்றி - Humanitarian Legal Literacy

No comments:

Post a Comment