Monday, November 8, 2010

பண்பாட்டு எழுச்சியை நோக்கி...!

நாகரிகத்தினதும் அறிவியலினதும் நூற்றாண்டு என்று நாம் இந்நூற்றாண்டைக்குறிப்பிடுகிறோம். ஆனால் அக்கிரமங்களும் அநாச்சாரங்களும் மலிந்து போன அமைதியற்ற உலகத்தையே காண்கிறோம். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக சடவாத, மதச்சார்பற்ற சிந்தனைகளின் அடியாகவே இவ்வுலகத்தின் ஒழுங்கு தீர்மானிக்கப்பட்டு வருகிறது. வஹியின் (இறைகட்டளையின்) வழிகாட்டல்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. விளைவு?

1. மனிதர்களின் பண்புகளும் நன் நடத்தைகளும் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மோசமாகியுள்ளன.

2. குடும்ப அமைப்பு சீர்குலைந்து வருகிறது.

3. மதுவும் போதைப்பொருள் பாவனையும் களவும், கொலையும், பாலியல் துஷ்பிரயோகங்களும் சர்வசாதாரணமாகிவிட்டன.

4. ஆண் - பெண் தொடர்புகளில் பேணப்பட வேண்டிய எல்லா வரையறைகளும் நீக்கப்பட்டு விட்டன.

5. காதலும், சினிமாவும், நட்சத்திர நடன மேடைகளும் பொழுதுபோக்குகளாகி விட்டன.

6. ஆபாசத்திரைப்படங்களும், அரை நிர்வாண ஆடைக்கலாசாரமும் இளைய சமூகத்தை சீரழித்து வருகின்றன.

7. அநீதி, ஏமாற்று, மோசடி, பொய், பிறர் சொத்துக்களை அபகரிப்பது, அடுத்த சமூகங்களின் வளங்களை சுரண்டுவது, சுயநலம், பேராசை... போன்ற பண்புகளே மனித உள்ளங்களை ஆட்கொண்டுள்ளன. மொத்தத்தில் பண்பாட்டு விழுமியங்களை மறந்து பாதாளத்தை நோக்கி நாமெல்லோரும் சென்று கொண்டிருக்கிறோம். பல்வேறு சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் வஹியின் அருளைப்பெற்ற சமூகம் என்ற வகையில் இவ்விடயம் பற்றி நாம் சிந்திக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும். இந்நாட்டில் வாளேந்திப் போராடி இருப்பை நிலைப்படுத்திக் கொண்டவர்களல்லர் நாம். எமது மூதாதையரின் பண்புகளும் நடத்தைகளும் இன்று வரை இந்நாட்டில் நாம் நிலைத்து நிற்க காரணமாக இருக்கிறது.

எனவே எமது பண்புகளால் சான்றுபகர்ந்து எம்மையும் எமது குடும்பத்தையும், நாம் வாழும் கிராமங்களையும், நகரங்களையும், முழு நாட்டையும் பண்பாட்டு வீழ்ச்சியிலிருந்து பாதுகாத்து இஸ்லாமிய கோட்பாடுகள், வாழ்க்கை முறை, பண்பாடு நாகரீகம் என்பவற்றின் பால் மனித சமூகத்தை வழிநடத்தக்கூடிய ஒரு முன்மாதிரி சமூகத்தை கட்டியெழுப்ப அணிதிரள்வோம்!!!

Thursday, June 17, 2010

Poongavanam Vedio

உதவுங்கள்

மதிப்பிற்குரிய உதவும் கரங்களுக்கு,

பொருளாதார உதவிகளை வேண்டுவது சம்பந்தமாக

எமது Best Queen Foundation நிறுவனம் மூலம் பூங்காவனம் என்ற சஞ்சிகையை வெளியிட உத்தேசித்துள்ளோம். எனவே நாம் முன்னெடுத்துச் செல்லும் இந்த சிறிய முயற்சிக்கு தனவந்தர்களின் உதவி; மிகவும் அவசியமாக இருக்கிறது.

அதன் முதல் சஞ்சிகை வெளியீட்டுக்காக தாங்களிடமிருந்து பொருளாதார உதவிகளையும் எமது நிறுவனம் எதிர்பார்க்கிறது. அத்துடன் எதிர்வரும் காலங்களில் இச்சஞ்சிகையின் சிறப்பான வளர்ச்சிப் போக்குக்கும், தொடர் வெளியீடுகளுக்கும் கைகொடுத்து உதவுமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்.

மேற்கூறப்பட்ட சஞ்சிகை வெளியீடு தொடர்பான விடயம்

தினகரன் (2009.11.29 பக்கம் - 20)
வீரகேசரி (2009.11.29 பக்கம் - கதம்பம் 9)
எங்கள் தேசம் (டிசம்பர் 15 - 31, 2009 பக்கம் - 22)
தினக்குரல் (2009.12.27 பக்கம் 39)

ஆகிய பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.


Best Queen Foundation
21 E, Sri Dharmapala Road, Mount Lavinia, Sri Lanka.

Mobile:- 077 5009 222, 0719 200 580, 0716 203 711

E-mail:- bestqueen12@yahoo.com

Website:- www.bestqueen12.blogspot.com


Account Number Details ;
Commercial Bank, Mount Lavinia Branch
Best Queen Foundation,
Account Number :- 8930016177.

Wednesday, June 2, 2010

பெண்களுக்குப் பாரபட்சம் காட்டுவதையும், இழிவாக நடாத்துவதையும் இல்லாதொழிப்போம்!

மனிதன் பால் ரீதியில் ஆண்,பெண் என உயிரியல் வகையில் இரு பிரிவுகளுக்கு வகுக்கப்படுகின்றனர். இவ்விரு பிரிவுகளில் பெண் அநேகமாக பாரபட்சம் காட்டுதலுக்கு உட்படுகின்றாள். தாய், சகோதரி, மனைவி போன்ற பல்வேறு பாத்திரங்களை வகிக்கும் பெண் குடும்பத்தினுள் பெருமளவில் இத்தகைய பாரபட்சம் காட்டுதல்கள் மற்றும் இழிவாக நடாத்தப்படுதல்களுக்கும், சில வேளைகளில் மனைசார் வன் செயல்களுக்கும் இரையாக வேண்டியுள்ளாள்.

கல்வி கற்றல் மற்றும் தொழில்களில் ஈடுபடுதல் போன்ற பல துறைகளில் பெண்கள் பாரபட்சம் காட்டுதல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு பெண்களுக்கு எதிராக ஏற்படுகின்ற வேறுபாடுகளும், இழிவான செயல்களை எதிர்த்து டொமினிக்கன் இராச்சியத்தின் சர்வாதிகாரியாக இருந்த ரபாயல் ரெஜ்லோவுக்கு எதிராக குரல் எழுப்பிய மிராபல் (Merabal) சகோதரிகள் மூவரும் 1961ம் ஆண்டு கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலையின் மூலம் ஆரம்பித்த பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பது பற்றிய கலந்துரையாடல் ஐக்கிய நாடுகளில் பொது மாநாட்டினால் 1999ல் நிறைவேற்றி, ஒவ்வொரு வருடமும் நவம்பர் 25ம் திகதி பெண்கள் வன்முறைகள் எதிர்க்கும் சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இலங்கை சனத்தொகையில் 52% க்கு மேற்பட்ட பெண்கள் அன்னிய செலாவணியை ஈட்டுவதில் ஆண்களை விட முன்னிலை வகிக்கின்றனர். வெளிநாட்டில் பணிபுரியும் பெண்களும் ஆடைத்தொழிற்சாலைகளில் பணி புரியும் இளம் பெண்களும் இலங்கையின் பிரதான அன்னிய செலாவணி ஈட்டுத்தரக்கூடிய தேயிலைத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் ஆகியவர்களால் ஏற்படும் சேவை மகத்தானது. இன்னமும் மனைசார்ந்த பணி, சிறுவர் மற்றும் முதியோர்களை பராமரிப்பதில் பிரதானமாக இலங்கைப் பெண்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

குடும்பத்தினுள் பெண்கள் முழு நேர சேவையில் ஈடுபட்டிருப்பினும் வீட்டு வேலைகள், பிள்ளைகளைப் பேணிக் காத்தல் பற்றிய பொறுப்புக்களின் பிரதானமான பங்கொன்று அல்லது அதைப் பூரணமாக செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் பெண்ணுக்கு உள்ளது.

ஒரு பெண் குடும்பத்தின் முழுப்பராமரிப்பையும் கொண்டு சென்றாலும் தாய்க்கு பிள்ளைகளின் பாதுகாவலர் அந்தஸ்து உரித்தாக்கப்படுவது சட்டமுறையான விவாகமொன்று நடைபெறாதுள்ள சந்தர்ப்பத்தில் மாத்திரமே. சட்டமுறையான விவாகமொன்றினால் கிடைக்கும் பிள்ளைகளின் பாதுகாவலர் அந்தஸ்து ஒரு தாய்க்கு உரித்தாவதில்லை.

சுய தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு கடன் வசதிகள் மற்றும் பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதில் கஷ்டங்கள் ஏற்படுகின்றன. பல பெண் ஊழியர்கள் வெளிநாடுகளில் பல விதமான கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கின்றனர் என்பதுடன் திரும்பி வருவது, சிதைந்திருக்கும் குடும்பத்திற்கே. வேதனங்கள் பெறாத மலைசார் ஊழியர்களின் எண்ணிக்கை ஆண்களைப் போல் நான்கு மடங்காகும். விவசாய ஓய்வூதியத்திட்டத்தினுள் பெண்களின் பதிவு மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளது. விவசாய ஓய்வூதியத்திட்டத்தில் அது 23% ஆக உள்ளதுடன் கடற்தொழில் ஓய்வூதியத்திட்டத்தில் 1% ஆகவும் உள்ளது.

சமுதாயத்தில் பெண் பலவீனமுள்ளவராகக் கருதுதல் மற்றும் அதே விதத்திலேயே நடாத்தப்படுதல், விதவைகள், மணநீக்கம் செய்தவர்கள் மற்றும் தனிமையிலான தாய்மார்கள் பீடிக்கப்பட்ட குழுவொன்றாக ஆகுதல்.

சுகாதாரம் மற்றும் போசணை போன்ற விடயங்களில் பெண்களுள் சுமார் 50% பேர் மந்த போசணையால் பீடிக்கப்படுகின்றனர். (உதாரணம்:- சுகாதாரம், போசணை, குடும்பக்கட்டுப்பாடு, குழந்தைகள் மற்றும் நோய்களைத் தடுத்தல் மற்றும் சுகப்படுத்தல்) பிரசவத் தொகுதியில் புற்று நோய்களை முதனிலையில் இனங்காணுதல் பற்றிய அறிவை பெண்களுக்கு பெற்றுக் கொடுத்தல்;

விஷேசமாக முலைகளில் மற்றும் கர்ப்ப வாயிலில் உண்டாகின்ற புற்று நோய்கள், எச்.ஐ.வி வைரஸ் எயிட்ஸ் நோய் உட்பட பாலியல் ரீதியில் நோய்களின் அபாயகரத்தன்மை, தாயின் உயிரைப்பறிக்கும் சட்ட விரோத கருச்சிதைவுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பூப்பெய்துதல், கர்ப்பிணியாதல், மாதவிடாய் நிற்றல் மற்றும் வயது முதிர்தல் போன்ற பெண்களின் வாழ்க்கைச் சக்கரத்தில் பல சந்தர்ப்பங்களில் பிரச்சனைகள் நிகழ்கின்றன.

கணவரால் ஏற்படுகின்ற தொல்லைகள், சேவைத்தளத்தில் ஏற்படுகின்ற பாலியல் தொல்லைகள், போக்குவரத்தின் போது ஏற்படுகின்ற பாலியல் தொல்லைகள், யுத்த மோதல்கள் நிகழ்கின்ற பல்வேறு வன்செயல்கள் போன்று சமுதாயத்தின் எல்லாத் துறைகளிலிருந்தும் பெண் கற்பழிப்பு பற்றிய அறிக்கைகள் கி;டைக்கப் பெறுகின்றன.

முன்பை விட இப்போது பெண்களை நன்கு கவனிக்கிறார்கள் என்றாலும் சீதனக் கொடுமை ஒழிந்தபாடில்லை. தொழில் ரீதியாகவும் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்டுவதுண்டு. பாதையில், பஸ்ஸில் என்று ஆண்களின் வக்கிரப்புத்தி பெண்கள் மீது தாவப்படுகிறது.

பெண்களுக்கு சமவுரிமை கிடைத்து விட்டது என்று கூறிக் கொண்டாலும் பொருளாதார, சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் குடியியல் ரீதியில் இன்னும் இரண்டாம் பட்சமாகவே கவனிக்கப்படுகின்றனர். இதன் மூலம் பெண்களின் உரிமை மீறல் அப்பட்டமாகவே நடக்கிறது. இவ்வாறான கருத்துக்களினூடாக பார்க்கிற போது விசேஷ ஒரு குழுவாக பெண்கள் மீது கவனம் செலுத்தி அவர்களது உரிமைகளை பேணிக்காப்பது அத்தியவசியமாகிறது.

நன்றி - Humanitarian Legal Literacy

Photo